கடுமையான வறட்சி காரணமாக கந்தளை பகுதியில் வறண்டுபோன கிணற்றில் சிக்கியிருந்த 46 நட்சத்திர ஆமைகள் மற்றும் ஒரு மிதவை ஓட்டு ஆமை (Flapshell Turtle) உட்பட 47 ஆமைகள் நேற்று (26) வனவிலங்கு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
கந்தளை வனவிலங்கு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கந்தளை வனவிலங்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வறண்ட கிணற்றில் சிக்கியிருந்த ஆமைகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட 47 ஆமைகளும் பாதுகாப்பாக கந்தளை நீர்த்தேக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.








