42வது தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மீலாத் விழா என்பது இஸ்லாமிய சமூகத்தின் ஆன்மீக, பண்பாட்டு மற்றும் மனிதநேய விழுமியங்களை நினைவுகூரும் முக்கியமான நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் அன்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, சமாதானம், நீதி மற்றும் மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இன்றைய சூழலில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், 42வது தேசிய மீலாத் விழா இலங்கையர்களிடையே அன்பு, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக அமைய வேண்டும்” என கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பரஸ்பர மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், இலங்கை மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை மற்றும் சுபீட்சத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், 42வது தேசிய மீலாத் விழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கலாநிதி ஜனகன் குறிப்பிட்டுள்ளார்.









