பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அருகே ‘டிராகன் பால் இசட்’ (Dragon Ball Z) கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட தீம் பார்க் ஒன்றை அமைக்க பிரான்ஸும் சவுதி அரேபியாவும் 7 பில்லியன் டொலர் (6 பில்லியன் யூரோ) மதிப்பிலான திட்டத்தில் இணைந்துள்ளன.
பாரிஸின் வடமேற்குப் பகுதியில் உள்ள Cergy-Pontoise அருகே இந்த தீம் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சவுதியின் பொழுதுபோக்கு மற்றும் முதலீட்டு நிறுவனமான Qiddiya வழங்கவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மூன்று தீம் பார்க்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொழுதுபோக்கு வளாகத்தின் ஒரு பகுதியாக இந்த ‘டிராகன் பால் இசட்’ தீம் பார்க் அமையவுள்ளது.உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய மங்கா மற்றும் அனிமே தொடரான ‘டிராகன் பால்’, மறைந்த ஜப்பானிய கலைஞர் அகிரா தொரியாமா உருவாக்கியதாகும்.
எனினும், தீம் பார்க் திறக்கப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.









