நாடு முழுவதும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த தேடுதல் நடவடிக்கையில் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது 27,001 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 147 பேரும் அடங்குகின்றனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,126 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









