இலங்கையின் முன்னணி நகை நிறுவனமான Vogue Jewellers, கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை தனது புதிய வர்த்தகத் தூதுவராக (Brand Ambassador) நியமித்துள்ளது.
இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நகை நிறுவனங்களில் ஒன்றான Vogue Jewellers, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகளவில் மதிக்கப்படும் கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்காரவை தனது வர்த்தகத் தூதுவராக நியமித்துள்ளது.
சிறப்பு, நேர்மை மற்றும் உயர்ந்த தரநிலைகளை தொடர்ந்து பேணுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இரு தரப்பினரின் பயணங்களையும் இந்த கூட்டாண்மை ஒன்றிணைக்கிறது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நம்பிக்கை, சிறந்த கைவினைத்திறன், புத்தாக்கம் மற்றும் நீடித்த தரம் ஆகியவற்றின் அடையாளமாக Vogue Jewellers திகழ்ந்து வருகிறது. இலங்கையின் நகை வடிவமைப்புத் துறையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள இந்நிறுவனம், இலங்கையின் வேறு எந்த நகை நிறுவனத்தையும் விட அதிகமான சர்வதேச நகை வடிவமைப்பு விருதுகளை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உலக கிரிக்கெட்டின் உயர்ந்த மட்டத்தில் விளையாடிய குமார் சங்கக்கார, ஒழுக்கம், தொடர்ச்சியான சிறப்பான செயல்திறன், தலைமைத்துவம் மற்றும் சிறப்பு ஆகிய பண்புகளுக்காக உலகளவில் அறியப்படுகிறார்.
கூட்டாண்மை தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த Vogue Jewellers நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அனுர ஹேமச்சந்திர, இந்த கூட்டாண்மை வர்த்தக நிறுவனத்திற்கும் அதன் தூதுவருக்கும் இடையிலான சாதாரண இணைப்பு அல்ல என தெரிவித்தார்.
“குமார் மற்றும் Vogue ஆகிய இரண்டும் இலங்கையில் இருந்து உருவாகி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இரு பயணங்களை பிரதிபலிக்கின்றன. சிறப்பை நோக்கிய தொடர்ச்சியான முயற்சி, தமது துறைக்கான மரியாதை மற்றும் நீண்டகால மதிப்பை உருவாக்கும் நற்பெயர் ஆகியவையே இரு தரப்பினரையும் இணைக்கின்றன” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக Vogue Jewellers நம்பிக்கை, கைவினைத்திறன், புத்தாக்கம் மற்றும் உயர்ந்த தரநிலைகளுக்காக அறியப்பட்டு வருவதாகவும், குமார் சங்கக்காரவின் ஒழுக்கம், நேர்மை மற்றும் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு ஆகியவை நிறுவனத்தின் பெறுமதிகளுடன் நெருக்கமாகப் பொருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
Vogue Jewellers நிறுவனம் மெல்பேர்னில் முழுமையான காட்சியகத்தை நிறுவியுள்ள நிலையில், இலங்கையின் நகை கைவினைத்திறனை சர்வதேச சந்தையில் மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் இலங்கையின் பெயரை நிலைநிறுத்தியுள்ள குமார் சங்கக்காரவுடனான இந்த கூட்டாண்மை முக்கியத்துவம் பெறுகிறது.
நிகழ்வின் நிறைவில், குமார் சங்கக்காரவுக்கு Vogue Jewellers நிறுவனத்தினால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்க நிற கிரிக்கெட் மட்டை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் வழங்கிய சிறப்பான பங்களிப்பையும், சர்வதேச அரங்கில் இலங்கையை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியதையும் கௌரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டது.
Vogue Jewellers மற்றும் குமார் சங்கக்கார இணைந்து மேற்கொள்ளும் இந்த புதிய பயணம், சிறப்பு என்பது ஒருமுறை அடையப்படும் சாதனை அல்ல; தலைமுறை தலைமுறையாக பேணப்பட வேண்டிய ஒரு தரநிலை என்ற இரு தரப்பினரின் பொதுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.












