தெஹ்ரானின் பாரம்பரிய சந்தைகளில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றாலும், நாட்டின் மக்கள் அதிகரித்து வரும் விலைகள் மற்றும் பலவீனமடைந்து வரும் நாணயத்தால் நாளாந்த வாழ்க்கையில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
ஈரானில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 87 சதவீதத்தைக் கடந்துள்ள நிலையில், உணவு மற்றும் பானங்களின் விலைகள் சுமார் 130 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க பல குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கலைஞர்கள் தங்களது பொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதுடன், அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் எரிபொருள் விலையும் மேலும் உயரக்கூடும் என வாகன சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான விலையேற்றம் காரணமாக ஈரானியர்களின் அன்றாட வாழ்க்கை மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








