சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி, 2024ஆம் ஆண்டு 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், 2025ஆம் ஆண்டு 2 சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









