2026ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடந்த 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
பரீட்சை நேர அட்டவணைக்கு அமைய, வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழுகைக்குப் பின்னரும் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் நலன் கருதி ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் நிறைவடையும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல கதீப்மார்களையும் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.
அப்ரா அன்சார்








