ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மீன்பிடி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனமொன்றுக்கு ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்ரா அன்சார்








