கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 08.08.2026 நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மைதானத்தின் ‘C’ Upper மற்றும் Lower, ‘D’ Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, மைதானத்தின் அனைத்து வாயில்களும் பார்வையாளர்களுக்காக மாலை 5.30 மணி முதல் திறக்கப்படவுள்ளன.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ரசிகர்களுக்காக பல்வேறு பொழுதுபோக்கு அங்கங்களும், கவர்ச்சிகரமான நிறைவு விழாவும் நடத்தப்படவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.









