ஏ.எஸ்.எம்.ஜாவித்- 2026.07.15
லேக் ஹவுஸ் இன்டர் யூனியன் எம்லோயர் கிளையும் சுகாதார அமைச்சும் இணைந்து லேக் ஹவுஸ் ஊழியர்களுக்கு இலவசமாக முழு உடற்பரிசோதனை மெடிகல் சேவை ஒற்றை இன்று வழங்கியது.
இரத்தப் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, கண் பரிசேதனை , ஈசிஜி உள்ளிட்ட முழு உடற்கூற்று பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.
கொழும்பு வைத்தியசாலை மற்றும் கொழும்பு மாநகர வைத்தியசாலைகளின் விசேட வைத்தியர்கள், தாதியர்கள், மருந்து கலவையாளர்கள், வைத்திய உதவியாளர்கள் கலந்து கொண்டு இந்த மருத்துவ பரிசோதனை சேவையை வழங்கினர்.








