ஏ.எஸ்.எம்.ஜாவித்
இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற மாநிட்டின் போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதால் புனித முஹர்ரம் மாதம் இன்று மஹ்ரிபு தொழுகையுடன் ஆரம்பமாவதாக பிறைக்குழுத் தலைவர் இலங்கை வாழ் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிதிதத் தலைவர் மெளலவி புர்ஹானுத்தீன் உள்ளிட்ட உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரோஸ் அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.








