மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) கிலோ மீற்றர் 1310800 தொடக்கம் 3210450 வரை அமுல்படுத்துவதற்கு தகைமைகளுடன் கூடிய உள்நாட்டு ஒப்பந்தகாரர்களிடையே போட்டி விலைமனுக் கோரல் மூலம் அரச நிதியைப் பயன்படுத்தி ஒப்பந்த பக்கேஜ் 07 இன் கீழ் போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2A,2B, 2C மற்றும் 2கு பக்கேஜ்களுக்கு 6 விலைமனுதாரர்களும், 2E பக்கேஜ் இற்கு 05 விலைமனுதாரர்களும், 2D பக்கேஜ் இற்கு 04 விலைமனுதாரர்களும், 2G பக்கேஜ் இற்கு 03 விலைமனுதாரர்களும் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் கீழ்வரும் வகையில் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
• 2A பக்கேஜ் நிர்மாணத்திற்கு 14.90 பில்லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு மாகா இன்ஜினியரிங்க் பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.
• 2B பக்கேஜ் நிர்மாணத்திற்கு 14.71 பில்லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு கே.டீ.ஏ.வீரசிங்க அன்ட் கம்பனி பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.
• 2C பக்கேஜ் நிர்மாணத்திற்கு 14.12 பில்லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு இன்டர்நெஷனல் கன்ஸ்ரக்சன் கொன்சோட்டியம் பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.
• 2D பக்கேஜ் நிர்மாணத்திற்கு 16.39 பில்லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு நெம் கன்ஸ்ரக்சன் பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.
• 2E பக்கேஜ் நிர்மாணத்திற்கு 18.70 பில ;லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு அக்சஸ் இன்ஜினியரிங்க் பீஎல ;சீ இற்கு வழங்கல்.
• 2F பக்கேஜ் நிர்மாணத்திற்கு 14.52 பில்லியன் ரூபாய்கள் (பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு எட்வெட் அன்ட் கிறிஸ்ட் பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.
• 2G பக்கேஜ் நிர்மாணத்திற்கு 19.10 பில்லியன் ரூபாய்கள் பெறுமதி சேர் வரியில்லாமல்) தொகைக்கு மாகா இன்ஜினியரிங்க் பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்கல்.










