புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
11.04.2026 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.










