இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது 09.04.2026 அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு விடுத்துள்ள டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய – அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரை இவ்வாறான பதிலடித் தாக்குதல்கள் தொடரும்.”
இதேவேளை, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை வானிலேயே அழித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










