இஸ்மதுல் றஹுமான்
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய அனர்தத்தில் நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவில் 3043 குடும்பங்களைச் சேர்ந்த 12121பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் நீர்கொழும்பில் பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த,தெனியவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில் பலர் வீடுகளுக்குள் சிக்குண்டனர். இவர்களை மீட்பதில் ஈடுபடும் சமூக சேவா அமைப்புகள் படகுகள் மூலம் வெளியே கொண்டுவந்தனர்.மேலும் பலர் மேல்மாடிகளில் தங்கியுள்ளனர்.
வெளியேறியவர்களில் சிலர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன் சிலர் இடைதங்கள் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் 3043 குடும்பங்களைச் சேர்ந்த 12,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் 270 குடும்பங்களைச் சேர்ந்த 958 பேர் 07 இடைதங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி தெரிவித்தார்.
தழுபொத்த, துவன, கட்டுவ, போரத்தொட்ட, கொச்சிகடை தேவஸ்தானங்களிலும் சுகதாராமவிகாரை மற்றும் பெரியமுல்லை அல் ஹிலால் மத்திய கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. வெள்ளத்தில் சிக்கி வீடுகளில் உள்ளவர்களுக்கு
படகுகளின் உதவியுடன் உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன.
கட்டான பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 108 குடும்பங்களைச் சேர்ந்த 1031 பேர் நீர்கொழும்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். இதேபோல் தேவஸ்தினங்கள் ஊடாகவும் உணவு வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
நீர்கொழும்பு தொகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன பிரதேச செயலாளருடன் இனைந்து தேவையான மேற்கொள்ள ஸ்தல விஜயங்களை மேற்கொண்டு தேவையான
நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
நீர்கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் தழுபொத்தயிலும், நீர்கொழும்பு மீரிகம வீதியில் தீன்சந்தியிலும் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி கார்யாலயம் முகாம்களுக்குச் சென்று வைத்திய சிகிச்சை நிலையங்கள் நடாத்தியபோது தேவையான மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
நீர்கொழும்பு நகரத்துக்கு ஊடகச் செல்லும் ஹெமில்டன் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. பிரதேசத்தில் பல இடங்களில் பெரிய மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. அவற்றை வெட்டி அகற்றும் பனியில் தீயனைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அடிக்கடி இடத்துக்கிடம் மின்சார தடைகளும் ஏற்படகின்றன.
கொட்டுவ மைதானம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தன. வாராந்த சனிக்கிழமை இரவு சந்தையும் இடம்பெறவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களிலும் பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.










