கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனழை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றம் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
நெற்செய்கை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், மழையினால் அவற்றுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலவச காப்பீட்டு பாதுகாப்பு பெறும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் இதுவரை எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சபை அதிகாரிகள் தொடர்ந்தும் விவசாயிகளுடன் தொடர்பில் ஈடுபட்டு பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற்று நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது










