அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பயணிகள் பேருந்துகளில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படுமென்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

September 25, 2025
0 Comment
107 Views








