இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு நிருபர்
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் 27 வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.
29 வட்டாரங்களைக் கொண்ட நீர்கொழும்பு மாநகர சபையில் 27 வட்டாரங்களில்
தேசிய மக்கள் சக்தியும் ஹுனுபிட்டி வட்டாரத்தில் சுயேட்சை குழு இலக்கம் 4 ல் உதைபந்தாட்ட சின்னத்தில் போட்டியிட்ட சரூஜ் சத்தாரும் கம்மல்துறை வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட நுஸ்கியும் வெற்றி பெற்றுள்ளனர்.
பட்டியல் மூலம் 19 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும். போட்டியிட்ட ஏனைய கட்சிகளான
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, போதுஜன ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் போராட்ட முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன எந்த ஒரு வட்டாரத்திலும் வெற்றி பெறவில்லை.
தேசிய மக்கள் சக்தியில் போரதொட்டயைச் வட்டாரத்தில் போட்டியிட்ட சட்டதரணி பஸீர், கடற்கரை தெரு தெற்கு தொகுதியில் தினேஷ்கான், ஏத்துகால் வட்டாரத்தில் வினோத் மிரால் ஆகியோரும் வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.










