இம்மாதம் கடந்த 6 நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 16,51,335 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2023 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பதினான்கு இலட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று ஆகும்.










