பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அதனால் ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இன்று பிற்பகுதில் இடம்பெறாவிட்டால் நாளையும் அதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி சூரியப் புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக (NOAA) தெரிவித்துள்ளது.
அத்துடன் சூரியனில் மூன்று புள்ளிக் குழுக்கள் சூரியப் புயலை ஏற்படுத்தும் வலிமையோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் பாதிக்கப்படும்.
தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மாதக்கணக்கில் தடைபடலாம் என விண்வெளி ஆய்வு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்துள்ளனர்.