“மற்றவர் செய்தவற்றை அன்றி நாம் செய்பவை குறித்து கவனம் செலுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் இம்முறையும் புத்தர்ஸ்மி வெசக் வலயம் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.
இந்த வலயம் மே 23, 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலகம், ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் கங்காராம விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
இந்த வலயம் தன்சல் மற்றும் மின்னொளி தோரணைகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது.
இம்மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் வளாகத்தில் உணவு, பிஸ்கட், தேநீர், உணவு தன்சல் வழங்கும் நிகழ்வு இரவு 7.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை வேளையில் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸாரி பக்திப் பாடல் இசைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
பாலதக்ஷ மாவத்தை மற்றும் பேர வாவியின் அருகில் “சூல்ல தர்மபால” கதையை எடுத்துக்காட்டும் வெசக் தோரணத்தை மே 23 மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைக்க உள்ளதோடு, இந்த தோரணம் 23, 24, 25 ஆம் மூன்றாம் திகதிகளில் காட்சிப்படுத்தப்படும்.
இதேநாட்களில் கங்காராமய விகாரை வளாகத்திலும் வெசத் தோரணமொன்று அமைக்கப்படவுள்ளதோடு, 23,24,25, 26 திகதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச பாடசாலைகள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைப் பிரநிதிநிதுவப்படுத்தி “500” பேருடைய பங்கேற்புடன் தியான நிகழ்வொன்றும் (20) மாலை 7.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.