அஷ்ரப் ஏ சமத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் 75வது ஊடகச் செயலமர்வு 21ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியவியல் மற்றும் சமூக ஊடகங்கள் எனும் தலைப்பில் நாளை 25.11.2023 கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் காலை 08.00 – 04.30 பி.ப வரை நடைபெறும். இந் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், மற்றும் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் அதிபர் எம்.எச். மும்தாஜ் பேகம் ஆகியேர்கள் தலைமையில் நடைபெறும்.
இவ் ஊடக செயலமர்வினை கல்லுாரியின் அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாாியின் மாணவத் தலைவிகள், மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
பிற்பகல் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஆதில் சத்தார் .பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் அலுவலகத்தின ஊடகம் ,கலாச்சாரம் மற்றும் கல்வி செயலாளர் கலந்து கொள்வார்.
அத்துடன் கௌரவ அதிதியாக கேனல் நளின் ஹேரத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர்- பேச்சாளர்,தேசிய பாதுகாப்புக் கல்விநிலையத்தின் பணிப்பாளர். ,விசேட அதிதியாக ஜ.வை.எம் ஹனீப் பணிப்பாளர் ஜே.ஜே.பவுன்டேசன் ஆகியேர்களும் கலந்து கொள்வார்கள்.