2026ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கை விட அதிக வருமானத்தை உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஈட்டியுள்ளது.
இதன்படி, 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 16ஆம் திகதி வரையில் 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானத்தை உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஈட்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 491 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 115 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றமானது வரி நிர்வாகத்தின் வலிமை, வரி வருமானத்தைச் சேகரிப்பதில் காணப்படும் வினைத்திறன் மற்றும் வரிச் சட்டங்கள், விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுவதில் மக்களிடையே காணப்படும் ஈடுபாடு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.








