பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் 09.05.2024 அரசாங்க நிதி பற்றிய குழுவான கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தமது எக்ஸ் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள விசா பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.