அரசாகத்தின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியல்லா வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு முதல் மூன்று இலட்சம் ரூபாய்க்கு வாகன விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருநூறுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பலர் இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே இந்த வாகன உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்பாக அரசாங்க நிறைவேற்று தர அதிகாரிகளுக்கு வரியல்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்கியது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் முதலில் எம்.பிக்களுக்கு வழங்கினால், பொது மக்கள் மத்தியில் தவறான கருத்து ஏற்படலாம் என்பதால், அரசின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கிய பின், எம்.பிக்களுக்கு உரிமம் வழங்குவதே சரியானது என, பல்வேறு தரப்பினரால் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
அத்துடன், அரசின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போன்று வாகன அனுமதிப்பத்திரத்தை தங்களுக்கும் வழங்குமாறு எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசின் நிறைவேற்று தர அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன உரிமத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இருபத்தைந்து இலட்சமாகும்.
வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அரச அதிகாரிகள் வாகன உரிமத்தை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியுள்ளது என, பலர் கூறுகின்றனர். அந்தக் குழுவில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுனர்கள் னர்கள் உள்ளனர்