இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பிரதி செயலாளர் மிச்செல் சான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன்போது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.