கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஊடகவியலாளர் சில்மியா யூசுப் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
ஊடகப்பயணத்தில் வளர்ந்து வரும் இவர் 2020 ம் ஆண்டு தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஆரம்பித்து 92 மாணவர்களுடன் 2024 .04. 27ம் திகதி சனிக்கிழமை தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.
மேலும் இவரது இளம் வயதில் B.Ed, HNDE, Mass Media Communication Studies, Creative development & Graphics, Mojo Journalism மற்றும் Migration Law & Policy போன்ற பாடநெறிகளை கற்று பட்டமும் பெற்றுள்ளார்.
குறிப்பாக பலதுறைகளில் பயணிக்கும் இவர் சமூக ஆர்வலராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
இவர் synewsline இன் பிரதம ஆசிரியராகவும், கொழும்புடைம்சின் ஆசிரியராகவும் கடமையாற்றுவதோடு The Great India News, Supeedsam இவற்றுக்கு நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார்.