ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக கல்முனை ஹுதா ஜும் ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்த்னவும் கலந்து கொண்டார் .
காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக.கல்முனை ஹுதா ஜும் ஆப்பள்ளிவாசல் சார்பில் சேகரிக்கப்பட்ட 1,589,000.ரூபா நிதி இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்முனை ஹுதா ஜும் ஆப்பள்ளிவாசல் சார்பில் அதன் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் உட்பட நிருவாகிகளும் கலந்து கொண்டனர்