அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் புனித பிறப்பை நினைவுகூரும் இந்நன்னாளில், இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக யுனிவர்சல் கேட்வே ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் மொஹமட் அஃப்தாப் தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினமானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத முன்மாதிரியையும், மனிதகுலத்திற்கு அவர் வழங்கிய இரக்கம், கருணை, பணிவு மற்றும் சேவை ஆகியவற்றின் நிலையான செய்தியையும் சிந்தித்துப் பார்க்கும் ஒரு புனிதமான தருணமாகும்.
அன்பும் கருணையும் கொண்டிருப்பதே உண்மையான வலிமை என்பதையும், எமது வேறுபாடுகள் ஒருபோதும் எம்மைப் பிரிக்கக்கூடாது என்பதையும், ஒருவருக்கொருவர் அக்கறையுடன் இருப்பதே அமைதியான மற்றும் நல்லிணக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் எமக்கு நினைவூட்டுகின்றன.
இப்புனிதமான சந்தர்ப்பத்தில், அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான எமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக்கொள்வோம். அமைதியும் செழிப்பும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.
அல்லாஹ் எமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அருள்வானாக.









