பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இத்தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.








