தேசிய மக்கள் சக்தி (NPP) ஏற்பாடு செய்யும் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (12) பொலன்னறுவையில் உரையாற்றவுள்ளார்.
“மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் வலுவுடன், அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரணி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
NPP அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் தொடர் பேரணிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
நிகழ்வுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரசாரப் பொருட்களின்படி, பொலன்னறுவையில் நடைபெறும் இந்தப் பேரணி விவசாயிகள் மற்றும் விவசாயத்துறையை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.
கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் NPP பேரணிகளில் ஜனாதிபதி பங்கேற்று, அரசாங்கத்தின் இரண்டு வருடகால சாதனைகள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








