பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ரஜமஹா விகாரையின் பினர மகா பெரஹெரா நாளை (19) நடைபெறுவதையொட்டி, சிலாபம்–குருநாகல் பிரதான வீதியின் போக்குவரத்து இரவு 7 மணி முதல் 9 மணி வரை கட்டுப்படுத்தப்படவுள்ளது.
பெரஹெரா குறித்த வீதியூடாக பயணிக்கவுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குருநாகலில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடதுபுறமாகத் திரும்பி விஹார மாவத்தை ஊடாக மாற்று வழியைப் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று, சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் பிங்கிரிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








