2026 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (07) முதல் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை முழுமையாக ஒன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk என்ற இணையத்தளத்தில் உள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டும்.
அதன் பின்னர், குறித்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.








