பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் அஞ்சல பண்டார முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.
குசல் மெண்டிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் அஞ்சல பண்டாரவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை, பதும் நிஸ்ஸங்கவின் பங்கேற்பு மருத்துவ அனுமதியைப் பெறுவதில் தங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2025–2027 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 9ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.








