நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் நீடித்துள்ளது.
இதற்கமைய, இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) மாலை 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை
பின்வரும் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பதுளை மாவட்டம்: எல்ல, பசறை
- கொழும்பு மாவட்டம்: பாதுக்க
- கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை
- கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரக்காப்பொல
- மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை
- நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த
- இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, களவானை, இம்புல்பே, நிவித்திகலை
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.








