நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக, 9 மாவட்டங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, உடுநுவர, தும்பனை, மினிப்பே, யட்டிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, எலபாத, அயகம, வெலிகேபொல, கொடகவெல, கொலொன்ன, பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, சீதாவக்க, காலி மாவட்டத்தின் தவலம, எல்பிட்டிய, கரந்தெனிய மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, இங்கிரிய, புலத்சிங்ஹல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் முதலாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, ருவன்வெல்ல, கேகாலை, வரகாப்பொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குராங்கெத்த மற்றும் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.








