மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்பரப்பில், கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இயந்திரம் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை 20.04.2026 காத்தான்குடி மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
நடுக்கடலில் படகு ஒன்று ஆளில்லாத நிலையில் தத்தளிப்பதாக காத்தான்குடி மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற்ற மீனவர்கள், அவர்களின் உதவியுடன் நடுக்கடலுக்குச் சென்று குறித்த படகை கயிறு மூலம் கட்டி இழுத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட படகில் “இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டுக் கழகம்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 அடி நீளம் கொண்ட இந்தப் படகில் இயந்திரமோ அல்லது அதனைச் செலுத்துபவர்களோ எவரும் இருக்கவில்லை.
இவ்வாறான ஒரு படகு இந்தப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தது இதுவே முதல்முறை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட படகு தற்போது இராணுவம் மற்றும் கடற்படையினரிடம்
இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










