சவுதி அரேபியாவின் தஹ்ரானில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் தங்களின் சட்டபூர்வமான இலக்குகள் எனக் குறிப்பிட்டு, அங்குள்ள பொதுமக்களை வெளியேறுமாறு ஹூதிப் படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.








