தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த ஜூன் 29ஆம் திகதி, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பின் மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.








