இஸ்மதுல் றஹுமான்
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தனிநபர்களுக்கு சுவீடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பெர் ஆங்கர் (PER ANGER)
விருது இந்த ஆண்டு இலங்கை சிவில் சமூக ஆர்வலர் தோழர் பிரிட்டோ பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் போராட்டத்தில் இது ஒரு முக்கியமான தருணம் என்பதால்
விருதை பெற்றுக்கொண்ட பிரிட்டோ பெர்னாண்டோ சுவிடனிலிருந்து கட்டுநாயக்க சர்வதேசம் விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவருக்கு காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தினால் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையம் புறப்பாடு வாயில் அருகே எவரிவத்தை மணிக்கூட்டு கோபுரம் அருகே மற்றும் சீதுவ ரத்தொழுகம காணாமல் போனாரின் நினைவு தூபிக்கு அருகே மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காணாமல் போனாரின் நினைவு தூபிக்கு அருகே இடம்பெற்ற
பிரதான வரவேற்பு நிகழ்வில் கதுருகஸ்ஆரே தம்மமாலா மெஹனின் தேரர், ரொஹான் சில்வா பாதிரியார், பிதா டெரன்ஸ் பிரனாந்து,
மத்திய கொழும்பு மனித உரிமை செயல்பாட்டாளர் எம்.எம்.தஸ்மின்,
திருமதி ஜெயந்தி தன்தெனிய பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம (பேராதெனியப் பல்கலைக்கழகம்) திருமதி ஆரியமலர் (காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஒன்றியம், மட்டக்களப்பு கிளை) ஐ.டி.ஆர். மல்லிகா (காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஒன்றியம், காலி கிளை) திருமதி சமிலா துஷாரி (திபிந்து அமைப்பு) ஆகியோர்கள் வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினர். கலைஞர் ஜயதிலக பண்டார அவர்களால் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன.
இறுதியாக பிரிட்டோ பெர்னாண்டோ நன்றிதெரிவித்து உரையாற்றினார்.
காணாமல் போன குடும்பங்களின் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காத,
நீதியை நாடி 35 ஆண்டுகளாக
எங்களுடன் வீதிகளில் போராடி வரும்,
சுவீடன் அரசாங்கத்தின் “Per Anger” விருது மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற,
பிரிட்டோ பிரனாந்து சகோதரரே
நீங்களே எங்கள் பலம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! என்ற பதாகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.









