கிண்ணியா செரண்டிப் பவுண்டேஷன் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வொன்று 2026.05.04 நடைபெற்றது.
பெரியாற்றுமுனை பிரதேசத்தைச் சேர்ந்த, ஐந்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்தின் தலைவரான திரு. ஜுனைதீன் அஸ்வர் (Junaideen Aswer) என்பவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இவருக்கு ஒரு படகும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வுதவிகள் கொழும்பைச் சேர்ந்த திரு. எம்.எம். முஈன் மஸாக்கீன் (MM Mueen Masakeen) ஆகியோரின் நிதி அனுசரணையில் வழங்கப்பட்டன. செரண்டிப் பவுண்டேஷனின் தலைவர் திரு. ஜே. அமானுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயனாளியிடம் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் செரண்டிப் பவுண்டேஷன் அமைப்பின் பொருளாளர் திரு. அன்வருல்லா, உப செயலாளர் திரு. ஜே. பிரோஸ்கான் மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. முனாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.










