சீகிரியா, பலுட்டாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 77 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், வீட்டை விட்டு வெளியே வந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







