(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எஸ்.பி பௌண்டேஷன், அல்-பத்தாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் அல்-பத்தாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியன இணைந்து நடாத்தும் உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்; மனிதநேயத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம்
29.08.2026 சனிக்கிழமை காலை 9 மணி முதல் சாய்ந்தமருது அல்-பத்தாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறும்.
ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய மனிதநேயப் பணிகளில் ஒன்றே இரத்த தானம். நாம் வழங்கும் உதிரம், அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் விலைமதிப்பற்ற உதவியாக அமையும்.
இம்மனிதநேயப் பணியில் பொதுமக்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து நலன்புரி நிறுவனங்களையும் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பிரதேசத்திலுள்ள அமைப்பின் உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களை இம்மனிதநேய இரத்த தான முகாமில் பங்கேற்று, உயிர்காக்கும் இந்த மகத்தான பணிக்கு தங்களது பங்களிப்பை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
“உங்கள் இரத்தம் ஒருவரின் உயிர்; உங்கள் ஒரு மணி நேரம்; ஒரு குடும்பத்தின் நம்பிக்கை”









