சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு முடிவை வீடியோ ஒன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
குறித்த வீடியோவில் உணர்ச்சிபூர்வமாகப் பேசிய ரொனால்டோ,
“போர்த்துக்கல் மக்களே, நமது தேசிய அணியின் 7ஆம் இலக்க ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது.
அந்த ஜெர்சி ஒருபோதும் எனக்கு மட்டுமே சொந்தமானது என நான் உணர்ந்ததில்லை. இருப்பினும், 23 ஆண்டுகளாக அதனை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.
41 வயதான ரொனால்டோ, போர்த்துக்கல் தேசிய அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும், ஐந்து முறை பலோன் டி ஓர் விருதையும் வென்றுள்ளார்.
ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைகளுடன் அவர் விடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், போர்த்துக்கல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதலைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கு ஒரு மாத காலத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







