இன்று (15) அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் கொழும்பின் பல பகுதிகளில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட – நாவல வீதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இன்று கனமழை தொடர்பான சிறப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








