ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.








