காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்காக, பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளிக்க எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கமைய, குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
தேசிய இயற்கை பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வது, இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவது மற்றும் குறித்த யானைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது ஆகியனவே இந்தப் பிரேரணையின் முக்கிய நோக்கங்களாகும்.








