கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வாகனங்களின் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம், அரசாங்கங்களின் மானியங்கள் மற்றும் பல்வேறு மின்சார வாகன வகைகள் சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், நுகர்வோர் அதிகளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரியில் ஈரான் போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட விலையேற்ற நெருக்கடியும், ஐரோப்பா முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை திடீரென அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், போதுமான பொது மின்சார வாகன சார்ஜிங் வசதிகள் இல்லாதது தொடர்ந்தும் முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.அத்துடன், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் குறைந்தால், மின்சார வாகனங்கள் மீதான நுகர்வோரின் ஆர்வம் குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் விலைச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், ஐரோப்பியர்கள் அதிகளவில் மின்சார வாகனங்களை கொள்வனவு செய்து வருவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.








