ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.








